இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்த எட்டு வங்கதேசத்தினர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கைதாகியுள்ளனர். இந்த எட்டு பேரில் நான்கு பேர் ஹவுரா-சென்னை சிறப்பு ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
மேலும் நான்கு பேர் ஹவுரா-ஆந்திர பிரதேசம் செல்லும் அமராவதி விரைவு வண்டியில் பயணம் செய்துள்ளனர். இந்த எட்டு பேரையும் ரயில் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து போலி ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமை, உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த மூன்றாண்டுகளாக இவர்கள் கோவாவில் தங்கியிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: இலக்கை காட்டிலும் 27% குறைவு - தடுப்பூசி திட்டம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்