ETV Bharat / bharat

பிரியங்கா காந்தி கைது: கவலை தெரிவித்த கணவர்!

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக அங்கு செல்ல முயன்ற பிரியங்கா காந்தி கைதுசெய்யப்பட்ட நிலையில் அதற்கு கவலை தெரிவித்து ராபர்ட் வத்ரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Oct 6, 2021, 10:34 AM IST

robert-vadra-post-on-priyanka-gandhi-arrest

திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர் தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். அதன் நீட்சியாக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கெரியில் ஞாயிற்றுக்கிழமை (அக். 3) போராட்டம் நடத்தினர். அப்போது துணை முதலமைச்சர் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுடன் சென்ற பாஜகவினர் உழவர் மீது காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனால், கோபமுற்ற உழவர் இரண்டு சொகுசு கார்களைத் தீயிட்டு கொளுத்தினர். இந்த வன்முறைச் சம்பவத்தில் சிக்கி நான்கு உழவர் உள்பட எட்டு பேர் வரை உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்ட உழவரைச் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு, சீதாப்பூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு

வீட்டுக் காவலில் இருக்கும் பிரியங்கா காந்தி உழவர் மீது கார் ஏற்றும் காணொலியை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்ய்ப்பட்டார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "இந்திய தண்டனைச் சட்டம் (இதச) பிரிவு 151இன்கீழ் பிரியங்கா கைதுசெய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. நேற்று பிரியங்காவுடன் தொடர்புகொண்டு பேசினேன்.

அவரைக் கைதுசெய்யம்படி எந்த உத்தரவும், அறிவிப்பும் வழங்கப்படவில்லை. நீதிபதி முன் பிரியங்கா முன்னிறுத்தப்படவில்லை. மேலும் அவரின் சட்ட ஆலோசகரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. இது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

மக்களின் பெரும் ஆதரவு

நான் லக்னோ செல்ல விமான நிலையத்திற்குச் சென்றபோது அங்கு என்னை அனுமதிக்கவில்லை. ஒரு கணவனாக என் மனைவிக்கு என்னால் நேரில் சென்று பார்த்து உதவ முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

இதில் நல்ல விஷயம் பிரியங்காவிற்கு மக்களின் பெரும் ஆதரவு உள்ளது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது, என் மனைவி விடுவிக்கப்பட்டு விரைவில் பாதுகாப்பாக வீடு திரும்புவார்" எனக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 38 மணிநேரத்தை தாண்டி தொடரும் வீட்டுச்சிறை - அறிக்கை வெளியிட்ட பிரியங்கா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.