டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்எல்ஏ.,க்கள் ஆறு பேர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
இவர்களை வரவேற்பதாக மாநில பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இதனை கடுமையாக சாடிய ஆர்எஸ்எல்பி கட்சியின் பொதுச்செயலாளர் மாதவ் ஆனந்த், “இது கூட்டணி தர்மம் அல்ல” என்று கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஒரு வலிமையான தலைவர். மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணக்கூடியவர். ஆகவே அவரை மக்கள் 15 ஆண்டுகளாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால் அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவில் ஒரு மிகப்பெரிய தவறு நடந்துள்ளது. இன்று (டிச.26) நடைபெறும் ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டத்தில் இப்பிரச்னை விவாதிக்கப்படும்” என நினைக்கிறேன் என்றார்.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் ஆறு ஜேடியூ எம்எல்ஏ.,க்கள் பாஜகவிற்கு தாவி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வு பிகாரிலும் நடக்கலாம் என அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ.,க்களை இழுத்தது பாஜக தவறு என்று ஆர்எல்எஸ்பி கட்சியின் பொதுச்செயலாளர் மாதவ் ஆனந்த் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிகார் கல்வி அமைச்சராகிறார் உபேந்திரா குஷ்வாஹா?