ETV Bharat / bharat

புதுச்சேரியில் கரோனா பரவும் இடர் - புதுச்சேரியில் கரோனா பரவும் அபாயம்

புதுச்சேரி: சட்டப்பேரவை வளாகத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதால் கரோனா பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

புதுச்சேரியில் கரோனா பரவும் அபாயம்
புதுச்சேரியில் கரோனா பரவும் அபாயம்
author img

By

Published : Jul 13, 2021, 10:48 PM IST

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. புதிய அமைச்சர்களின் ஆதரவாளர்கள் சட்டப்பேரவையில் குவிந்து வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். பலர் முதலமைச்சரைச் சந்திக்க சட்டப்பேரவைக்கு வர தொடங்கியுள்ளனர்.

இதனால் சட்டப்பேரவை அமைந்துள்ள வீதி முழுக்க இருசக்கர வாகனங்களால் நிரம்பிவழிகின்றன. வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். கடந்த இரு வாரங்களாக சட்டப்பேரவையில் தகுந்த இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அதிகரித்துவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்பேரவையில் சபாநாயகராக செல்வம் பதவி ஏற்ற பிறகு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறிவருகிறார்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தினமும் வாக்குவாதம் ஏற்பட்டுவருகிறது. சட்டப்பேரவை வளாகத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துவருவதால் கரோனா பரவும் இடர் உருவாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.