ஹைதராபாத்: கன்னட திரையுலகில் கடந்த வருடம் ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கலந்த படமாக காந்தாரா வெளிவந்து கன்னட மொழியில் மட்டும் அல்லாமல் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. இந்த படத்திற்கான பட்ஜெட் வெறும் ரூ.16 கோடி தான். ஆனால் படத்தில் வசூல் உலக அளவில் ரூ.400 என தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தாரா திரைப்படத்தின் இயக்குநரும் கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டிக்கு புதிய அடையாளத்தை இந்தியா முழுவதும் இப்படம் எற்படுத்தியது. காந்தாரா படத்தின் 100வது நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக காந்தாரா 2 குறித்த அப்டேட்டை வெளியிட்டது தயாாிப்பு நிறுவனம்.
காந்தாரா 2 படத்தின் முதல் கட்டப்பணிகளான திரைக்கதை மற்ற பணிகள் குறித்து இயக்குநரும் கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி ஈடுபட்டுவருவதாகவும், காந்தாரா 2 படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு 2023 நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் என படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
காந்தாரா முதல் பாகம் ரிஷப் ஷெட்டி சொந்த ஊரான கந்தபுராவில் படமாக்கப்பட்டது. தற்போது காந்தாரா 2 மங்களூரில் படமாக்கப்பட உள்ளது. இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக காடுகள், நிலம் மற்றும் நீர் அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட உள்ளது. காந்தாரா 2 படத்தின் பட்ஜெட் நடிகர்கள் ஆகியவற்றை தேர்வு செய்து பின் நான்கு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 2024ஆம் ஆண்டில் காந்தாரா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியட திட்டமிடப்பட்டு உள்ளது.
காந்தாரா முதல் பாகம் நாட்டுப்புறக் கதைக்களத்தை கொண்டு வெளிவந்தது. மேலும் இப்படத்தில் பஞ்சுர்லி தெய்வத்தின் பின்னணியை ஆழமாக ஆராய்ந்து படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதே போல் காந்தாரா 2 பாகத்திற்காக ரிஷப் ஷெட்டி கடலோரக் காடுகளில் இரண்டு மாதமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மக்களுக்கு நம்பகத்தன்மையுடன் கூடிய இணையற்ற அனுபவத்தை வழங்குவதற்காக முழு அர்ப்பணிப்புடன் படக்குழு தனது பணிகளில் ஈடுபட்டு உள்ளது. மேலும் காந்தாரா 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, போஸ்டர் மற்றும் முன்னோட்டம் ஆகியவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எனக்கு பிடித்த இயக்குநர் வெற்றிமாறன்- நடிகர் விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்!