ETV Bharat / bharat

புதுச்சேரியில் வழங்கப்படும் சத்துணவில் அரிசி மொச்சைக்கொட்டை அளவில் உள்ளது - Opposition leader Siva criticizes

புதுச்சேரியில் வழங்கப்படும் சத்துணவில் அரிசி மொச்சைக்கொட்டை அளவில் உள்ளதாகவும், இதனால் மாணவர்கள் உணவை சாப்பிடாமல் கீழே கொட்டுவதாகவும் எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 25, 2022, 9:54 AM IST

புதுச்சேரியின் அரசியல் நிலைகுறித்து விவாதிப்பதற்கு மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா, இந்த ஆட்சியில் மோசமான அரசியல் ஜனநாயகம் உள்ளது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போல், இந்த ஆட்சியில் முதலமைச்சர் நியமனத்தில் ஆரம்பித்து அமைச்சர், சபாநாயகர், ராஜ்யசபா உறுப்பினர் நியமிக்கப்படுவது வரை ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

ரவுடிக்கும்பல் போரட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது. ஆட்சி, அதிகாரிகள் துணையோடு வில்லியனூர், முத்தியால்பேட்டை நடந்த பொதுக்கூட்டத்திலும் ரவுடிக்கும்பல் தகராறு செய்தது. புதுச்சேரியில் பந்த் அறிவித்திருக்கிறார்கள். அந்த பந்த்தில் 10 பேர் தான் இருப்பார்கள். இது எங்கிருந்து யாரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை புதுச்சேரி மக்கள் நன்கு அறிவர். சபாநாயகர் வேலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒன்று உள்ளது. எந்த கட்சி சார்பில் ஆளுநராக நியமிக்கப்பட்டாலும் அவர்கள் இலைமறை காயாக அந்த கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால், பாஜக அலுவலகமாக ராஜ்நிவாஸை தமிழிசை மாற்றியுள்ளார்.

நான் கொடுக்கும் அறிக்கைக்கு பாஜக, என்.ஆர்.காங்கிரஸில் இருந்து பதில் வருவதில்லை. தகுதியில்லாத நபர்கள் எல்லாம் பதில் தருகின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலை மூடப்பட்டது. பாண்லே ஊழல் கண்ணுக்கு தெரியாத ஊழலாகிவிட்டது. புதிய கல்விக் கொள்கையில், அரிசி மொச்சைக்கொட்டை அளவில் உள்ளது. இதனால் மாணவர்கள் உணவை சாப்பிடாமல் கீழே கொட்டுகின்றனர். இதைப்பற்றி பேசுவதில்லை. 4 மாதமாக மாணவர்களுக்கு முட்டை போடவில்லை எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகளுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.