ETV Bharat / bharat

திருப்பதியில் லட்டு வாங்க கட்டுப்பாடு! - Srivari Darshan in Tirumala Tirupathi Devastanam

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் திருப்பதி தேவஸ்தானம் இலவச பிரசாத லட்டுடன் பக்தர்கள் கூடுதலாக இரண்டு லட்டுக்கள் மட்டுமே பெற வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

திருப்பதி  லட்டு
திருப்பதி லட்டு
author img

By

Published : Jun 2, 2022, 9:33 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை பொதுமக்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச லட்டு ஒன்று வழங்கப்படுவது வழக்கம். பணம் செலுத்தி கூடுதல் லட்டுக்களும் வாங்கிச் செல்லலாம்.

இந்நிலையில் தற்போது பிரசாத லட்டு வாங்க தேவஸ்தானம் கட்டுப்பாடு விதித்துள்ளது. திருப்பதியில் நாள்தோறும் சாமி தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இலவச லட்டுடன் 50 ரூபாய் கூடுதலாக செலுத்தி இரண்டு லட்டுக்கள் மட்டும் பெற வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 2 நாள்களாக பக்தர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில் கூடுதலாக நான்கு லட்டுக்கள் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் நாள்தோறும் பக்தர்களுக்கு வழங்க மூன்று லட்சம் லட்டுக்கள் தயார் செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க: உத்ரகாண்டில் நீதி வழங்கும் "கோலு தேவ்தா" கோயில் - குவியும் பக்தர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.