ETV Bharat / bharat

நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலி - கட்சியில் மாற்றங்கள் கொண்டு வர பா.ஜ.க மேலிடம் திட்டம்! - தெலங்கானா

பாரதிய ஜனதா கட்சியில், கட்சிப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளும் பொருட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில், புதன்கிழமை (ஜூன் 28ஆம் தேதி) இரவு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

reshuffle-on-cards-bjp-top-brass-burns-midnight-oil
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி - கட்சியில் மாற்றங்கள் கொண்டு வர பா.ஜ.க மேலிடம் திட்டம்!
author img

By

Published : Jun 29, 2023, 3:39 PM IST

டெல்லி: 2024ஆம் ஆண்டில், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்த வியூகங்களை வகுக்கும் பொருட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில், புதன்கிழமை (ஜூன் 28) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 5 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சிக்குள் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள போதிலும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும், இதுவரை வெளியாகவில்லை. பிரதமர் மோடி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, திரும்பிய சில நாட்களில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோர் அமைப்பு மற்றும் அரசியல் விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த முக்கியப் பிரமுகர்கள் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தைத் தொடர்ந்து, பிரதமர் இல்லத்தில் அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, தனது சமீபத்திய உரைகளில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு குறித்து பேசி வருகின்றார். இந்த திட்டம், பாரதிய ஜனதா கட்சியின் நீண்டகால தேர்தல் வாக்குறுதியாக தொடர்ந்து வருவது நினைவுகூரத்தக்கது. பிரதமர் மோடி, இந்த விவகாரம் குறித்து, தற்போது மிகத் தீவிரமாகப் பேசி வருவது, விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அக்கட்சியின் உறுதியான நிலைப்பாடாக இது இருக்கும், என்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அடைந்த தோல்வி, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள தெலங்கானா, சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களுக்கான பிரசார அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய, அக்கட்சியைத் தூண்டி உள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு முக்கியமான மாநிலங்களில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அங்கு உள்ள ஆளுங்கட்சிக்கு எதிரான காரணிகளைப் பயன்படுத்திக் கொள்வதில், பாரதிய ஜனதா கட்சி மும்முரம் காட்டி வருகிறது.

2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தனது நிலையை வலுப்படுத்தும் முயற்சியில், பாரதிய ஜனதா கட்சி, கடந்த மாதம் வெகுஜன இணைப்புப் பயிற்சியை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இந்த பிரத்யேக முயற்சியில் தீவிரமாக பங்கேற்றனர். இது மத்தியில் ஆளும் கட்சிக்கான ஆதரவைப் பெறுவதற்கும், நாடு முழுவதும் அதன் இருப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க தளமாக செயல்பட்டதாக, கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: Maamannan: பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது ‘மாமன்னன்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.