ETV Bharat / bharat

ராய்காட் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு; 4வது நாளாக தொடரும் மீட்புப்பணி! - 4வது நாளாக தொடரும் மீட்புபணி

மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட்டில் மலைக்கிராமத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Landslide
நிலச்சரிவு
author img

By

Published : Jul 23, 2023, 1:43 PM IST

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி இரவு, ராய்காட் மாவட்டத்தில் காலாபூர் அருகே இர்ஷல்வாடி என்ற மலைக்கிராமத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு பகலாக மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த 21ஆம் தேதிவரை 12 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். நேற்று(ஜூலை 22) மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 27ஆக அதிகரித்தது. மேலும் 80-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால், மாயமானவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கிராம மக்கள், மீட்புப் படையினர், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், இர்ஷல்வாடி கிராமத்தில், நான்காவது நாளாக இன்று(ஜூலை 23) மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன. பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மாயமானவர்களைத் தேடி வருகின்றனர். இது தொடர்பாக மீட்புப் படை அதிகாரிகள் கூறும்போது, "இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த 48 வீடுகளில் 17 வீடுகள் நிலச்சரிவில் சிக்கி இடிந்து விழுந்தன. நேற்று இரவு மழை காரணமாகவும், பனிமூட்டமாக இருந்ததாலும், மீட்புப் பணிகள் நிறுத்தபட்டன.

இன்று காலை முதல் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால், தோண்டுவதற்கு இயந்திரங்களைக் கொண்டு வர முடியவில்லை. மண்வெட்டி போன்றவற்றால் மண்ணை அகற்றித் தேடி வருகிறோம். இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதில், 12 பெண்கள், 10 ஆண்கள் மற்றும் நான்கு குழந்தைகள். ஒரு உடல் மட்டும் அடையாளம் காணப்படவில்லை. இந்த சோக சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்" என்றனர். இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதையும் படிங்க: Raigad landslide: நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு - தேடுதல் வேட்டை தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.