மருந்துகள் பற்றாக்குறையில் இருப்பதாக மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநில அரசுகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெம்டிசிவிர் மருந்தின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ரெம்டிசிவிர் மருந்து போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெம்டிசிவிர் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகளை அச்சத்தில், மக்கள் அதிக அளவில் வாங்கி செல்வதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரையோடு மக்கள் மருந்துகளை வாங்க வேண்டும்" என்றார்.
இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று (ஏப்.18) மட்டும், நாட்டில் 2,61,500 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மொத்த எண்ணிக்கை 1,47,88,109ஆக உயர்ந்துள்ளது.