புதுடெல்லி: டெல்லி பாஜக பிரமுகர் தஜிந்தர் பால் சிங் பக்கா. இவர் வழக்கு ஒன்றில் மே6ஆம் தேதி பஞ்சாப் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஹரியானா மற்றும் டெல்லி போலீசார் இடைமறித்து தஜிந்தர் பால் சிங் பக்காவை மீட்டனர்.
இதற்கிடையில் பக்காவின் தந்தை, டெல்லி காவல் நிலையத்தில் பக்கா கடத்தப்பட்டதாக புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பஞ்சாப் போலீசார் கைது நடவடிக்கையை ரத்து செய்த நீதிமன்றம் ஹரியானாவின் குருஷேத்ரா காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் இரவே பக்கா வீடு திரும்பினார். இதற்கிடையில் அவர் முன்பிணை கோரி பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தஜிந்தர் பால் சிங் பக்காவை வருகிற ஜூன் 5ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது.
இதையும் படிங்க: விசாரணை வளையத்துக்குள் ஐஏஎஸ் பூஜா சிங்ஹால்!