குஜராத் மாநிலம், ஜாம்நகரில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நிதா எம். அம்பானி கூறுகையில், "கரோனா இரண்டாவது அலையோடு இந்தியா போராடிவருகிறது.
இந்தச் சூழ்நிலையில், எங்களால் முடிந்த உதவியை செய்ய கடமைப்பட்டுள்ளோம். எனவே, ஜாம்நகரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அங்கு வரும் பொதுமக்களுக்கு அனைத்துச் சேவைகளும் இலவசமாக வழங்கப்படும். முதற்கட்டமாக, ஜாம்நகரில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 400 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்படும்.
![mukesh ambani business news Reliance Foundation gujarat jamnagar நிதா அம்பானி ஜாம்நகர் ரிலையன்ஸ் ஆப்பர் ரிலையன் கரோனா உதவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/noname_2804newsroom_1619619023_230.jpg)
அடுத்த இரண்டு வாரத்திற்குள் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வேறு இடத்தில் அமைக்கப்படும். இதற்குத் தேவையான மனிதவளம், உபகரணங்கள், பொருள்கள், மருத்துவ உதவி, நிதி உதவி உள்ளிட்ட அனைத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும்.
இந்த வசதிகள் ஜாம்நகர், கம்பாலியா, துவாரகா, போர்பந்தர், சௌராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏதுவாக இருக்கும். ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களுக்கும் ஆக்சிஜனை விநியோகம் செய்துவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: ஊழியர்களுக்கான கரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக் கொள்ளும் ரிலையன்ஸ்