டெல்லி: இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆன்லைன் சூதாட்டத்தால் நாட்டின் பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் சமூக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்ட செயலை ஊக்குவிப்பதாக இருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. அதோடு இந்த விளம்பரங்கள் 2019ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், செயற்கைக்கோள் தொலைக்காட்சி இணையசேவை ஒழுங்குமுறை சட்டம் 1995, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் விளம்பர விதிமுறைகள் 1978 ஆகியவற்றுக்கு எதிராக உள்ளன.
ஆகவே பொதுநலன் கருதி ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்குமாறு, பிரிண்ட், டிஜிட்டல், காட்சி ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல நாட்டிலுள்ள சமூக ஊடகங்கள், விளம்பர இடைத்தரகர்களும், விளம்பர வெளியீட்டாளர்களும் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்!