ETV Bharat / bharat

கேரளாவுக்கு ஒரே ஆண்டில் 1.88 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை - kerala domestic tourists

கரோனா ஊடங்குப் பின் கேரளா மாநிலத்துக்கு ஒரே ஆண்டில் 1.88 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கேரளாவுக்கு ஒரே ஆண்டில் 1.88 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை

author img

By

Published : Feb 7, 2023, 10:06 PM IST

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் புதிய சாதனை படைத்துள்ளது. கரோனா ஊரடங்குப்பின் 2022ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 1.88 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கரோனா ஊரடங்கு முன்பாக 1.83 கோடியாக இருந்தது.

கேரள சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம் மாநில வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகும். இந்த சுற்றுலாத்துறை கரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அதன்பின் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து மீள தொடங்கியது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டின் முடிவில் 2.63 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, மலப்புரம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன. அதேபோல எர்ணாகுளம் மாவட்டத்திற்கும் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த தகவலை கேரள சட்டப்பேரவையில் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ் தெரிவித்தார். அப்போது அவர், உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான சுற்றுலாவில் கேரளா மாநிலத்துக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்களில் கேரளா மாநிலமும் இடம்பிடித்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் மற்றும் டைம் போன்ற இதழ்களில் கேரளா மாநில சுற்றுலாவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான பாதுகாப்பாக வழங்கப்படுவதில்லை என்ற தவறான செய்தி பரவிவருகிறது. இது முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது. மதச்சார்பற்ற எண்ணம் கேரள அரசிடம் உள்ளது. கேரளா வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மோடி, அதானியின் உறவு இதுதான்" - மக்களவையில் புகைப்படங்களை காண்பித்து சம்பவம் செய்த ராகுல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.