வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று (டிச. 7) அறிவித்துள்ளார். இதன் மூலம் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம், 5.9 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். நாட்டில் பணவீக்கம் விகிதம் அதிகரித்துவருகிறது.
இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. ரெப்போ வட்டி 0.35 சதவீதம் உயர்வால் வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல, வாடிக்கையாளர்கள் பெறும் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: Delhi Corporation: டெல்லி மாநகராட்சி தேர்தல்; ஆம் ஆத்மி முன்னிலை!