ETV Bharat / bharat

ஆக்சிஜன் ஆலையை கட்டமைக்க ரூ.40 லட்சம் நிதியளிக்கும் பாஜக எம்பி! - எம்பி ரவி கிசான்

"பிராணவாயு தயாரிக்கும் ஆலையை நிறுவ ரூ.40 லட்சம் தருகிறேன். அதற்கான இடத்தைத் தேர்வு செய்து தாருங்கள்" என கோரக்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு பாஜக எம்பி ரவி கிசான் கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக எம்பி ரவி கிசான்
பாஜக எம்பி ரவி கிசான்
author img

By

Published : Apr 26, 2021, 1:35 PM IST

கோரக்பூர் (உத்தரப் பிரதேசம்): புதிதாகப் பிராண வாயு ஆலை அமைக்க ரூ.40 லட்சம் நிதியுதவி அளிப்பதாக பாஜக எம்பி ரவி கிசான் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக கோரக்பூர் நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பிராணவாயு தயாரிக்க எனது எம்பி நிதியிலிருந்து ரூ.40 லட்சம் அளிக்க விரும்புகிறேன். எனவே ஆலையை அமைக்கத் தேவையான இடத்தை தேர்வுசெய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி கிசான், "நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருகிறது. இச்சூழலில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரமான கோரக்பூரில் அதிகளவு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள மக்களுக்கு மருந்து அதிகமாகத் தேவைப்படுகிறது. இதனால்தான் பிராணவாயு ஆலை நிறுவ நிதியுதவி அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறேன். இடம் தேர்வுசெய்யப்பட்டவுடன், ஆலை கட்டுமான வேலைகள் துரிதமாகச் செய்து முடிக்கப்படும்.

தற்போது மாநிலத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. கரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்த அரசு பெரும் சவால்களை எதிர்கொண்டுவருகிறது" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.