ராஜஸ்தான்: ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள மஹாராவ் பீம்சிங் அரசு மருத்துவமனையில், 28 வயதான ருப்வதி என்ற பெண்மணி கடந்த 46 நாட்களாக நரம்பியல் பிரிவில் ஐசியூவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் நரம்புகள் தொடர்பான நோயால் உடல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு அசைய முடியாத நிலையில் இருந்ததாக தெரிகிறது.
அவரால் பேச முடியாது எனத் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை(மே 16) அவரது கணவர் சென்று பார்த்தபோது, படுக்கையில் இருந்த ருப்வதியின் கண் இமையை எலி கடித்து கொண்டிருந்தது. இதைக் கண்ட கணவர், உடனடியாக சென்று மருத்துவரை அழைத்துள்ளார். ருப்வதியை பரிசோதித்த கண் மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் மற்ற நோயாளிகளுக்கும் எலித் தொல்லை இருந்துள்ளது என்றும், ஐசியூ முழுவதும் எலிகள் சுற்றித்திரிகின்றன என்றும் நோயாளிகளின் உறவினர்கள் கூறினர். இதுகுறித்து கேட்டபோது, பூச்சிக் கட்டுப்பாடு வழக்கமாக செய்கிறோம் என மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் இந்தப் பிரச்னையை மூடி மறைக்க முயற்சிக்கிறது என நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியை தேடும் சுகேஷ் சந்திரசேகர் திகாரில் உண்ணாவிரதம்