ETV Bharat / bharat

தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை! - குர்மீத் ராம் ரஹீம்

தேரா சச்சா சௌதா ஆன்மீக அமைப்பில் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் நான்கு பேருக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை
author img

By

Published : Oct 18, 2021, 7:31 PM IST

ஹரியானா: ரஞ்சித் சிங் கொலை வழக்கில் குற்றவாளிகளான தேரா சச்சா சௌதா ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹரியானாவின் பஞ்ச்குலா சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று (அக்.18) தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சௌதா ஆன்மீக அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் உள்ள பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அரசின் முக்கிய துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதங்களை அனுப்புவதற்கு தேரா சச்சா சௌதா ஆன்மீக அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் உடந்தையாக இருப்பதாக குர்மீத் ராம் ரஹீமுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து 2002 ஆம் ஆண்டு ரஞ்சித் சிங் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அக்டோபர் 8 ஆம் தேதி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் , கொலை வழக்கில் தொடப்புடைய மேலும் நான்கு பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை, சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு 31 லட்சம் ரூபாய் அபராதம், மற்ற நான்கு பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் இரண்டு பெண் பக்தர்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் ஆகஸ்ட் 2017 ஆம் ஆண்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

ரஞ்சித் சிங் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை) மற்றும் 120(பி) குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: வீரப்பன்.. விஜய குமார்.. பட்டுக்கூடு.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.