நேற்று (மார்ச்.31) அறிவிக்கப்பட்ட வட்டிவிகித அறிவிப்பை திரும்பப் பெற்றதோடு, 2020-2021 கடைசி காலாண்டில் ஏற்கெனவே இருந்த வட்டி விகிதமே மீண்டும் நடைமுறையில் இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஏப்.01) ட்வீட் செய்துள்ளார்.
நேற்று இந்த அறிவிப்பு வெளியானது முதல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்த கடும் எதிர்ப்பலை காரணமாக ஒரே நாளில் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, ”நீங்கள் நடத்துவது அரசா இல்லை, சர்க்கஸா?” என நிர்மலா சீதாராமனைக் குறிப்பிட்டு கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், “கோடிக்கணக்கான மக்களை பாதிக்கக்கூடிய ஓர் மேலோட்டமான அறிவிப்பை வெளியிட்டு, அதனை மீண்டும் திரும்பப் பெற்று, இப்படியும்கூட ஒரு நாட்டின் பொருளாதாரம் செயல்படுமா? தார்மீகரீதியாக நிதி அமைச்சர் பதவியில் தொடரும் உரிமையை நீங்கள் இழந்து விட்டீர்கள்” எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், திருணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆகியோரும் நிர்மலா சீதாராமனை விமர்சித்து ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் என்பதுதான் இன்றைய முட்டாள்கள் தினத்தின் மிகப்பெரும் காமெடி’