ETV Bharat / bharat

ராமோஜி ராவின் பேத்திக்கு பிலிம்சிட்டியில் திருமணம்; குடியரசு துணைத்தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சூப்பர் ஸ்டார்கள் பங்கேற்பு - marriage ceremony at Ramoji Film City

ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவின் பேத்தியான ப்ரிஹதியின் திருமண வைபவம் ஹைதராபாத்திலுள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவின் பேத்திக்கு திருமணம்

author img

By

Published : Apr 16, 2022, 11:07 PM IST

Updated : Apr 16, 2022, 11:41 PM IST

ராமோஜி பிலிம் சிட்டி(ஹைதராபாத்): வண்ணமயமான விளக்குகளின் ஒளி வெள்ளத்திற்கு நடுவே ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவின் பேத்தியான ப்ரிஹதியின் திருமண வைபவம் ஹைதராபாத்திலுள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

செருக்குரி கிரண், சைலஜாவின் தம்பதியின் புதல்வியான ப்ரிஹதி, தண்டாமுடி அமர் மோகன்தாஸ், அனிதா தம்பதியின் மகனான வெங்கட் அக்ஷயுடன் திருமணம் செய்து கொள்கிறார். புதுமணத்தம்பதி ஞாயிறு 12.18 மணிக்கு திருமண உறுதியேற்கின்றனர். பிலிம் சிட்டியில் நடைபெறும் திருமணத்தில் குடும்பத்தினர், நண்பர்களோடு விஐபிக்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேடையில் திருமணம் நடைபெறுகிறது.

முக்கிய விருந்தினர்களாக குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி, தெலங்கானா அமைச்சர்கள் ஹரிஷ்ராவ், முகமத் அலி, இந்திராகரன் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவின் பேத்திக்கு திருமணம்

டோலிவுட்டின் பிரபல இயக்குநர் ராஜமவுலி, டோலிவுட் மெகாஸ்டார் சிரஞ்சீவி, தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ், ஜன சேனா கட்சியின் தலைவர் மற்றும் திரைப்பட நடிகர் பவன் கல்யாண் ஆகியோரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: கோலாகலமாக நடைபெற்ற ராமோஜி ராவ் இல்லத் திருமண விழா!

Last Updated : Apr 16, 2022, 11:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.