ETV Bharat / bharat

சுற்றுலாத் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக 2 விருதுகளைப் பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டி - தெலங்கானா

சுற்றுலாத் தலத்தின் சிறந்த குடிமை மேலாண்மை எனும் பிரிவின் கீழ் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கும், நான்கு நட்சத்திர விடுதிகள் பிரிவில் டால்பின் குழுமத்திலுள்ள சிதாரா ஹோட்டலுக்கும் தெலங்கானா மாநில சுற்றுலாத்துறை விருது வழங்கி கௌரவித்துள்ளது.

ramoji-film-city-bags-two-excellence-awards-in-tourism
சுற்றுலாத்துறையில் சிறப்பான பங்களிப்புக்கு இரண்டு விருதுகளைப் பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டி
author img

By

Published : Sep 28, 2021, 1:33 PM IST

ஹைதராபாத்: ராமோஜி ஃபிலிம் சிட்டி தெலங்கானா மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ‘சுற்றுலாத் தலத்தின் சிறந்த குடிமை மேலாண்மை’ எனும் பிரிவின் கீழ் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு நேற்று விருது வழங்கப்பட்டது.

தெலங்கானா மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கவுட் செப்டம்பர் 25ஆம் தேதி சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கும் இடங்களுக்கு 16 பிரிவுகளின் கீழ் விருதுகளை அறிவித்தார். இதில், ராமோஜி பிலிம் சிட்டியும். டால்பின் குழுமத்தின் சிதாரா ஹோட்டலும் இடம்பிடித்தன.

உலக சுற்றுலா தினம் பேகம்பேட்டிலுள்ள பிளாசா ஹோட்டலில் நேற்று(செப். 27) நடைபெற்றது. இதில், விருதுக்கு தேர்வான ஹோட்டல் நிர்வாகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் கலந்துகொண்டு மாநிலத்தில் உள்ள பல்வேறு வரலாற்றுத் தலங்களை சிறப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட காணொலிக் காட்சிகளை வெளியிட்டார்.

சுற்றுலாத் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக 2 விருதுகளைப் பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டி

பின்னர் நிகழ்வில் பேசிய அவர், மாநிலத்தில் பல வரலாற்று இடங்கள் உள்ளன என்றும் தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து அத்தகைய இடங்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு விருதுகள்

'சுற்றுலாத் தலத்தின் சிறந்த குடிமை மேலாண்மை' என்ற பிரிவின் கீழ் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு வழங்கப்பட்ட விருதை, ஃபிலிம் சிட்டி நிர்வாகிகளும், நான்கு நட்சத்திர ஹோட்டல்கள் பிரிவில் டால்பின் குழுமத்தின் சிதாரா ஹோட்டலுக்கு வழங்கப்பட்ட விருதை ஹோட்டலின் பொது மேலாளர் டிஆர்எல் ராவும் பெற்றுக்கொண்டனர்.

Ramoji Film City bags two excellence awards in tourism
விருதைப் பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டி நிர்வாகிகள்

விழாவில் பேசிய ராமோஜி ஃபிலிம் சிட்டி துணைத் தலைவர் கே. வெங்கடரத்தினம், கோவிட்- 19 பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாப் பயணிகளுக்காக ஃபிலிம் சிட்டி வரும் அக்டோபர் 8ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வழங்கப்பட்ட இவ்விருதுகள் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு பிரிவுகளில் விருதுகள்

ஐந்து நட்சத்திர ஹோட்டல் டீலக்ஸ் பிரிவில் வெஸ்டின் ஹோட்டலுக்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல் பிரிவில் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பார்க் ஹயாத் ஹோட்டலுக்கும் விருதுவழங்கப்பட்டது. புறநகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கான பிரிவில் கோல்கண்டா ரிசார்ட்ஸுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

4 நட்சத்திர ஹோட்டல்களுக்கான பிரிவில் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள தசபல்லா ஹோட்டலுக்கும், முருகவாணி ரிசார்ட்டும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த பசுமை ஹோட்டல்களுக்கான பிரிவில், தாராமடி பாராடரி முதல் பரிசையும், முலுகு மாவட்டம் ராமப்பா கோயில் அருகே உள்ள ஹரிடா ஹோட்டல் இரண்டாம் பரிசையும், நிசாமாபாத் மாவட்டம் அலிசாகரில் உள்ள லேக் வியூவ் ரிசார்ட் மூன்றாம் பரிசையும் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: படைப்பாளிகளின் உழைப்பிற்குச் சான்றாகத் திகழும் ராமோஜி ஃபிலிம்சிட்டி - குடியரசுத் தலைவர் புகழாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.