ETV Bharat / bharat

சுற்றுலாத் துறை மேம்பாட்டின் உச்சம்... ராமோஜி பிலிம் சிட்டிக்கு சிறப்பு விருது... - ராமோஜி பிலிம் சிட்டி டிக்கெட் விலை

சுற்றுலாத்துறை மேம்பாட்டில் சிறந்து விளங்கியதற்காக ராமோஜி பிலிம் சிட்டிக்கு தெலங்கானா வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டு உள்ளது.

Ramoji Flim City
Ramoji Flim City
author img

By

Published : Jul 3, 2023, 9:24 PM IST

ஐதராபாத் : சுற்றுலாத்துறை மேம்பாட்டில் சிறந்த விளங்கியதற்காக ராமோஜி பிலிம் சிட்டிக்கு தெலுங்கானா வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருதை ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாக இயக்குனர் விஜயேஸ்வரி பெற்றுக் கொண்டார்.

தெலுங்கானா வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மூலம் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்காக இந்த விருது வழங்கப்பட்டது. ஐதராபாத்தில் நடைபெற்ற விழாவில் மாநில தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமாராவ் சிறப்பு விருதை வழங்கிய நிலையில் ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாக இயக்குனர் விஜயேஸ்வரி பெற்றுக் கொண்டார்.

FTCCI Excellence Award
FTCCI Excellence Award

நிலையான சுற்றுலா, புதுமை மற்றும் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ராமோஜி பிலிம் சிட்டிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்து உள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம், உணவுப் பாதுகாப்பில் உயர்மட்டத் தரங்களைப் பேணுவதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்திடம் இருந்து (FSSAI) மதிப்புமிக்க 'ஈட் ரைட் கேம்பஸ் விருது' ராமோஜி பிலிம் சிட்டிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ள ராமோஜி பிலிம் சிட்டி, திரைப்பட தயாரிப்பாளர்களின் சொர்க்கமாகவும், விடுமுறையை கொண்டாடுபவர்களின் கனவு இடமாகவும் உள்ளது. ஏறத்தாழ 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக பரவி, சினிமா ரசிகர்களின் கனவு ஸ்தலமாக விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும், சுமார் 200 திரைப்பட யூனிட்கள் தங்களது கனவுகளை நனவாக்க ராமோஜி பிலிம் சிட்டி திரைப்பட நகரத்திற்கு வருகிறார்கள். ஏறக்குறைய அனைத்து இந்திய மொழிகளிலும் 2 ஆயிரத்து 500 படங்களுக்கு மேல் ஏற்கனவே ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு "ஈட் ரைட் கேம்பஸ்" விருது - FSSAI அங்கீகாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.