அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அங்கு அமைய உள்ள ராமர் கோயிலை அமைத்து நிர்வகிக்க ராம்ஜன்ம பூமி தீர்த்த ஷேத்திரா என்ற பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள், நன்கொடைகள் உள்ளிட்டவற்றை இந்த அறக்கட்டளை செய்துவரும் நிலையில், புதிய ராமர் கோயில் வளாகத்தை விரிவுபடுத்தும்விதமாக அறக்கட்டளை 30 ஏக்கர் நிலத்தை கூடுதலாக வாங்கியுள்ளது. ஒரு சதுர அடி ரூ.690 என்ற அடிப்படையில் சுமார் 1.15 லட்சம் ஏக்கர் சதுரடி நிலம் வாங்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கட்டுமானத்திற்காக இதுவரை சுமார் ரூ.1,600 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 400 கிலோ வெள்ளி செங்கல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய அடாவடி சக்தி பாஜக - மம்தா தாக்கு