ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் மிகப்பெரும் ஹிட்டான ரங்கஸ்தளம் படத்தை இயக்கிய புச்சி பாபு சனா, ராம் சரண் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரங்கஸ்தளம் படத்தில் ஏற்கனவே ராம் சரண் நடித்து இருந்த நிலையில் புச்சி பாபு சனா இயக்கத்தில் மீண்டும் அவர் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.
இந்நிலையில் இருவர் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மிக எதிர்பார்ப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் ராம் சரணுடன், நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடம் மேலும் ஆவலை அதிகப்படுத்தி உள்ளது. விஜய் சேதுபதி ஏற்கனவே இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரஜினியுடன் பேட்ட, கமல்ஹாசனுடன் விக்ரம், விஜய்யுடன் மாஸ்டர், ஷாருக்கானுடன் ஜவான் ஆகிய திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: எங்களுக்கு பிரேக்கப்பா?.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து உண்மை உடைத்த அமீர் - பாவ்னி!
மேலும் இந்த கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் படப்பிடிப்புக்கு முன்பாகவே படத்தின் சாட்டிலைட் உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட வாய்ப்பு உள்ளது.
பொழுதுபோக்கு நிறைந்த இந்த பான் இந்தியா படத்தை விரிதி சினிமாஸ் நிறுவனமும், சுகுமார் ரைட்டிங் ப்ரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் ராம் சரண் தற்போது பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி தற்போது மாநகரம் பட இந்தி ரீமேக்கான மும்பைக்கர் படத்திலும், கத்ரினா கைஃபுக்கு ஜோடியாக மேரி கிறிஸ்துமஸ் என்னும் படத்திலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தெலுங்கில் ஏற்கனவே வில்லனாக நடித்த உப்பண்ணா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Jailer box office: விரைவில் ரூ.500 கோடியை நெருங்கும் ஜெயிலர்...