மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பெருந்திரளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் முன்னின்று நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், விவசாயிகள் இப்போராட்டம் தொடர்பாக ராகேஷ் திகாயத் ஈ டிவி பாரத்துக்கு பிரத்தியேக கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதில், "நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுகள் மக்களிடையே வளர்ச்சி என்ற போலி பிம்பத்தை கட்டமைத்து வருகின்றன.
எந்தப் பகுதியிலும் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படவில்லை. வேலைவாய்ப்பு, விலைவாசி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் அரசு தோல்வியடைந்துள்ளது. பொய் கூறுவதில் தங்கப்பதக்கம் வாங்கும் அளவிற்கு உத்தரப் பிரதேச அரசு பொய் கூறிவருகிறது.
வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் போல பிரதமர் மோடி ஆடச்சி நடத்தி வருகிறார். விவசாயிகளின் இயக்கம் இதை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளது. எனவே வரும் தேர்தலில் விவசாயிகளின் கேள்விக்கு அரசு பதில் கூறித்தான் தீரவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ’கெஜ்ரிவாலுக்கு பயந்து முதலமைச்சர்களை மாற்றும் காங்கிரஸ், பாஜக’