டெல்லி: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ராஜ்நாத் சிங் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். ஜாய்பூர், தல்டங்ரா மற்றும் காக்தீப் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொள்கிறார்.
இது குறித்து ராஜ்நாத் சிங் ட்விட்டரில், “மேற்கு வங்கத்தின் ஜாய்பூர், தல்டங்ரா மற்றும் காக்தீப் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதன்கிழமை (மார்ச் 24) நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் கோட்டாய் நகரில் நடந்த பேரணியில் கலந்துகொண்டார். செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) உள்துறை அமைச்சர் அமித் ஷா மெதினாப்பூர் பேரணியில் பங்கெடுத்தார்.
294 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதியும், நிறைவு கட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்குகள் மே2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.
இதையும் படிங்க: ஊழலின் மையப்புள்ளியாக கேரளா மாறிவிட்டது- அமித் ஷா