ETV Bharat / bharat

ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால விமான இறங்குதளம்: திறந்து வைத்த ராஜ்நாத் சிங்! - முக்கிய செய்திகள்

ராஜஸ்தான் மாநிலம், பாா்மரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய விமானப் படையின் அவசரகால இறங்குதளத்தை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இருவரும் திறந்து வைத்தனர்.

அவசரகால விமான இறங்குதளம்
அவசரகால விமான இறங்குதளம்
author img

By

Published : Sep 9, 2021, 5:01 PM IST

Updated : Sep 9, 2021, 5:11 PM IST

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் உள்ள 925A நெடுஞ்சாலையில் சத்தா-காந்தவ் பகுதியில் உள்ள அவசரகால தரையிறங்கும் தளம் இன்று (செப்.09) திறந்து வைக்கப்பட்டது.

ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் இதனைத் திறந்து வைத்தனர்.

அமைச்சர்கள் இருந்த விமானம் கொண்டு ஒத்திகை

இந்த நிகழ்வில் முதல் விமானமாக சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவுரியா ஆகியோருடன் தரையிறக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது.

அவசரகால விமான இறங்குதளம்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின்படி, ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் 3.5 கி.மீ தூரத்துக்கு இந்த அவசரகால தரையிறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

’நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும்’

இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் "இந்த திட்டம் சர்வதேச எல்லைகளில் அமைந்துள்ள பார்மர் - ஜாலோர் மாவட்டங்களின் கிராமங்களுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்தும் வகையில் அமையும். மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த வசதி நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால விமான இறங்குதளம்

மேலும், இந்தத் தளம் அனைத்து வகையான விமானங்களையும் தரையிறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

19 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட தளம்

இந்த அவசரகால தரையிறங்கு தளம் தவிர, இந்திய விமானப்படை, இந்திய இராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்ப குந்தன்புரா, சிங்கானியா, பகசார் ஆகிய கிராமங்களில் மேலும் மூன்று ஹெலிபேட்கள் இந்தத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ளன.

அவசரகால விமான இறங்குதளம்
அவசரகால விமான இறங்குதளம்

இத்தளம் அமைக்கும் பணிகள் சென்ற 2019ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டு 19 மாத காலக்கட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை, இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றின் மேற்பார்வையில் GHV இந்தியா தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’வேலையில்லாத் திண்டாட்ட காலத்தில் 'வி' வடிவ பொருளாதார மீட்சியா...’ - ப.சிதம்பரம் சாடல்!

Last Updated : Sep 9, 2021, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.