ETV Bharat / bharat

ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு - இந்தியா ஆஸ்திரிலேயா உறவு

ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டுட்டனுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Rajnath
Rajnath
author img

By

Published : Sep 10, 2021, 9:43 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா '2+2 அமைச்சரவை பேச்சுவார்த்தை' நாளை (செப்.11) ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.

இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டுட்டனுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில், இரு நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள், இந்தோ-பசிபிக் பிராந்திய கூட்டுறவு, பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் ஆகியவை குறித்து ஆலோக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோவிட்-19 பரவலுக்குப் பின் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் முக்கிய அரசு பேச்சுவார்தை இதுவாகும். சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பு நாடுகள் அவ்வப்போது பாதுகாப்பு, ராணுவ கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் இந்த நாடுகள் மலபார் கடற்படை கூட்டு பயிற்சி மேற்கொண்டன.

இதையும் படிங்க: டான்களுக்கு சீட் இல்லை - முக்தார் அன்சாரிக்கு 'நோ' சொன்ன மாயாவதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.