ETV Bharat / bharat

"ராஜீவ் காந்தி எண்ணிலடங்கா சாதனைகளுக்கு சொந்தக்காரர்" - சோனியா காந்தி புகழாரம்! - ஸ்ரீபெரும்புதூர்

Rajiv Gandhi achieved milestones - Sonia Gandhi: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கை கொடூரமாக நிறைவுற்று இருந்தாலும், அவர் குறுகிய காலத்தில் எண்ணிலடங்கா சாதனைகளை படைத்து உள்ளதாக சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.

ராஜீவ் காந்தி எண்ணிலடங்கா சாதனைகளுக்கு சொந்தக்காரர் - சோனியா காந்தி புகழாரம்!

author img

By

Published : Aug 21, 2023, 2:23 PM IST

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, நாட்டின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு சிறந்த முறையில் ஆட்சி நடத்தியவர் என்றும் அவர் சிறிதுகாலம் மட்டுமே, பதவியில் இருந்தாலும், அளப்பரிய சாதனைகளை படைத்து உள்ளதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.

ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாள், நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி உள்ளிட்டோரும், லடாக் பகுதியில் பாங்கோங் டிசோ ஏரிப் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவப் படத்திற்கு ராகுல் காந்தி மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் 25வது ராஜீவ் காந்தி தேசிய சாத்பாவனா விருது வழங்கும் விழா, டில்லியில் உள்ள ஜவஹர் பவனில் நேற்று (ஆகஸ்ட். 20) நடைபெற்றது. இந்த விழாவில் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, முன்னாள் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரியங்கா காந்தி வாத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், 2020-21ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி தேசிய சாத்பாவனா விருதை, முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் குடியிருப்பு நிறுவனமான பனஸ்தலி வித்யாபீடத்திற்கு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சோனியா காந்தி கூறியதாவது, ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கை கொடூரமாக நிறைவுற்று இருந்தாலும், அவர் குறுகிய காலத்தில் எண்ணிலடங்கா சாதனைகளை படைத்து உள்ளார்.

நாட்டின் பன்முகத்தன்மையில் மிகவும் கவனம் செலுத்தி வந்தார். நாட்டுக்குச் சேவை செய்ய கிடைத்த நேரங்களில் எல்லாம் எண்ணற்ற சாதனைகளைச் செய்து உள்ளார். பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் திகழ்ந்து வந்தார். பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு போட்டியிடும் வாய்ப்பினை, ராஜீவ் காந்தி போராடி பெற்றுத் தந்து உள்ளார்.

இதன் காரணமாகவே, தற்போது ஊரக மற்றும் நகர்ப்புற அமைப்புகளில் 15 லட்சத்திற்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் உள்ளனர். வாக்கு அளிக்கும் வயதின் வரம்பை 21 இல் இருந்து 18ஆக குறைத்தவர் ராஜீவ் காந்தி தான் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி ராஜீவ் காந்தி பிறந்தார். 1984ஆம் ஆண்டில் நிகழ்ந்த, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், தனது 40வது வயதில், பிரதமர் ஆனார். இதன்மூலம், இந்திய நாட்டின் இள வயதுப் பிரதமர் என்ற பெருமையை ராஜீவ் காந்தி பெற்று இருந்தார். 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராஜீவ காந்தி பங்கேற்று இருந்த நிலையில் அப்போது நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்திற்கு, விடுதலைப்புலிகள் இயக்கம் பொறுப்பு ஏற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Chandrayaan-3: சந்திரயான்-3 லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.