ETV Bharat / bharat

ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி ரூ.50 லட்சம் பணம் கேட்ட பெண் மருத்துவர்!

பெண் மருத்துவர் ஒருவர், ஐபிஎஸ் அதிகாரியை போலி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ரூ.50 லட்சம் கேட்டுள்ள சம்பவம் குறித்து ஜெய்ப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி 50 லட்சம் பணம் கேட்ட  பெண் மருத்துவர்...

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2023, 9:26 PM IST

ஜெய்ப்பூர்(ராஜஸ்தான்): பெண் மருத்துவர் ஒருவர், ஐபிஎஸ் அதிகாரியை போலி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைக்க போவதாக மிரட்டி அவரிடம் ரூ.50 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஐபிஎஸ் அதிகாரி, கடந்த ஆக.18 ஆம் தேதி ஜவஹர் வட்ட காவல் நிலையத்தில் அந்தப் பெண் மீது புகார் அளித்தார்.

இதுகுறித்து ஜவஹர் காவல் நிலைய அதிகாரி அரவிந்த் குமார் சரண் கூறுகையில், மருத்துவராக பணியாற்றி வரும் பிரியங்கா என்ற பெண் மீது ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் குமார் மீனா புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு, தான் ராஜஸ்தான் நிர்வாக சேவையில் (Rajasthan Administrative Service - RAS) ப்ரோபேஷனரி அதிகாரியாக பணியாற்றிக்கொண்டு இருந்த போது, பிரியங்கா என்ற பெண் தானும் RAS-க்கு தயாராகி வருவதாகவும், இதனால் தனக்கு உதவ வேண்டும் எனக் கூறி அறிமுகமாகியுள்ளார்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் ஒருமுறை அந்தப் பெண்ணிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி, பின்னர் திருப்பிக் கொடுத்ததையும் ராஜேஷ் புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த 2021-ல், ராஜேஷ் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்குக் கடந்த மே 2023-ல் திருமணம் நடந்துள்ளது. இதன் பிறகு, அந்தப் பெண்ணுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தியதாக ராஜேஷ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

ராஜேஷின் திருமணம் பற்றி தகவலறிந்ததும் பிரியங்கா, ராஜேஷை அழைத்து மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை அவர் மறுத்தனால் ஆத்திரமடைந்த பிரியங்கா, 50 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் இல்லையென்றால் போலி பாலியல் வன்கொடுமை செய்வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக கடந்த நான்கு மாதங்களாக அந்த பெண் மருத்துவர் பிரியங்கா தனக்கு பலமுறை போன் செய்து வற்புறுத்தியதாக ராஜேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நட்பாகப் பழகிய பெண், தற்போது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும் ராஜேஷ் ஐபிஎஸ் புகாரளித்துள்ளார். இதனையடுத்து ஐபிஎஸ் அதிகாரியின் புகாரின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜவஹர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நட்பாக பழகியதைப் பயன்படுத்தி, ஐஏஎஸ் ஆகிய நண்பரை அவரது மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னை மணந்து கொள்ளுமாறும், இல்லாவிடில் பொய் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுப்பேன் என்றும் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : மது அருந்த பணம் கேட்டு டார்ச்சர்... மகனை அடித்துக் கொன்ற தாய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.