கோடா: ராஜஸ்தான் மாநிலம் தாதாபடி பகுதியில் உள்ள ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தான் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்த நிலையில், தேர்ச்சி பெற, பேராசிரியர் கிரிஷ் குமாரை சந்திக்கச் சொல்லி சக மாணவர் அர்பித் வற்புறுத்தியதாகக் கூறியுள்ளார்.
மேலும் பேராசிரியர் கிரிஷ் குமாரை சந்தித்த போது, பாலியல் இச்சைகளுக்கு ஒத்துழைத்தால் தோல்வி அடைந்த பாடத்தில் அதிக மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி அடைய வைப்பதாகக் கூறியதாக மாணவி புகாரில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பேராசிரியர் கிரிஷ் குமார் அதிக மதிப்பெண் வழங்குவதாகக் கூறி பல்வேறு மாணவிகளை அழைத்ததாக, மாணவி தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து பேராசிரியர் கிரிஷ் மற்றும் மாணவர் அர்பித் ஆகியோர் மீது வழக்குப் பதிந்த போலீசார், மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குஜராத், ஒடிசாவில் கரோனா பி.எஃப் 7 வைரஸ் கண்டுபிடிப்பு! - மீண்டும் கரோனாவா?