ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் சந்த் (24). இவர் நேற்று (ஆக 4) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், எனது தந்தை சாஹேப் சிங் 2003ஆம் ஆண்டு உயிரிழந்தார். அப்போது எனக்கு வயது 5.
அதன் பின் நானும் எனது தாயும், தாய் மாமா கோவர்தன் கவனிப்பில் இருந்தோம். எனக்கு 23 வயதாகும்போது திருமணம் நடந்தது. அப்போது எனது தந்தையின் சொத்துக்களை கேட்டேன். ஆனால், கோவர்தன் அவரது மகன்கள் ராம் பரோசா, தீரஜ், ஷிவ்லஹரி ஷர்மா நான்கு பேரும் சேர்ந்து பிடிவாதமாக தரமறுத்தனர்.
இதையடுத்து போலீசில் புகார் அளித்தேன். இந்த விசாரணையில் எனது அப்பா பெயரிலிருந்த சொத்துக்களை என்னுடை போலி இறப்புச் சான்றிதழ் மூலம் அவர்களது பெயரில் மாற்றப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து எனது தாய், மனைவியுடன் பிரிந்துவந்து விட்டேன். ஆகவே, நான் இறந்துவிட்டதாக கூறி அபகரிக்க எனது சொத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் 40 ஆயிரம் பேருக்கு மருத்துவம் பார்த்த போலி ஆசாமி கைது