பன்ஸ்வாரா: ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டத்தில் பனியாலா என்ற கிராமத்தில், நேற்று(செப்.18) மாலை பொது நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.
அப்போது உணவுடன் வழங்கப்பட்ட இனிப்பை சாப்பிட்டதும் ஏராளமான மக்களுக்கு உடல்நிலை மோசமடைந்தது. குழந்தைகள் உள்பட 125-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாக அலுவலர்கள், உடனடியாக கிராமத்துக்குச்சென்று, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், கையாள முடியாமல் மருத்துவர்கள் திணறினர். இப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: 56 இஞ்ச் மோடி ஜீ சாப்பாடு - 40 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.8.5 லட்சம் பரிசு