புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிவருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அதன் கூட்டணியிலிருந்து ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி விலகியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகியுள்ளதாக அக்கட்சி தலைவர் ஹனுமான் பெனிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியிருந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணிலிருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது நினைவுக்கூரத்தக்கது.