கோவிட்-19 இரண்டாம் அலை தாக்கத்தால் இந்தியா தவித்துவரும் சூழலில், அதன் தொடர்ச்சியாக தற்போது பல்வேறு மாநிலங்களில் ’கறுப்பு பூஞ்சை நோய்’ பரவத் தொடங்கியுள்ளது. ’மியூகோர்மைகோஸிஸ்’ என்ற இந்த நோய், குறிப்பாக கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுவந்த நபர்களுக்கே ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
சில சமயங்களில் ஆட்கொல்லியாக மாறிவிடும் இதில், பாதித்தவர்கள் தங்கள் சருமத்தின் பாகங்களை அகற்றும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்துவரும் நிலையில், கறுப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
அம்மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மியூகோர்மைகோஸிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சுவாமி மன்சிங் மருத்துவமனையில் இதற்கென பிரத்தியேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு புதிய தொற்று' - மியூகோர்மைகோசிஸ் என்றால் என்ன?