ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள பாங்கரா கிராமத்தில் டிசம்பர் 8ஆம் தேதி திருமண விழாவின் போது எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. அப்போது 5 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிந்தனர். 52 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் நேற்று (டிசம்பர் 12) 6 பேர் உயிரிழந்ததனர். அதைத்தொடர்ந்து இன்று (டிசம்பர் 13) நள்ளிரவு முதல் மதியம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில், மணமகளின் தாயார் ஜஸ்சு கன்வரும் (50) அடங்குவார். இதனிடையே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், எரிவாயு சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். அதோடு சிரஞ்சீவி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய - சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளது: சீன வெளியுறவுத்துறை