ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. 20 மாவட்டங்களில் உள்ள 90 நகராட்சி இடங்களில் 48 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் சிறப்பான வெற்றி பெற்றது.
அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக 37 இடங்களில் வெற்றிபெற்றது. சுயேச்சை உறுப்பினர்கள் மூன்று இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ், ஆர்.எல்.பி. ஆகிய கட்சிகள் ஒரு இடங்களையும் கைப்பற்றின.
வார்டு உறுப்பினர் தேர்தலில் மொத்தமுள்ள 3035 வார்டுகளில், காங்கிரஸ் 1,197 வார்டுகளிலும், பாஜக 1,140 வார்டுகளிலும், சுயேச்சை உறுப்பினர்கள் 634 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர்.
இதையும் படிங்க: மன்மோகன் சிங் சொன்னதை செய்து காட்டியிருக்கிறேன் - வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி