ETV Bharat / bharat

ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட் நீதித்துறை மீது கடும் விமர்சனம்!

ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட் நீதித்துறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட் நீதித்துறை மீது கடும் விமர்சனம்!
ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட் நீதித்துறை மீது கடும் விமர்சனம்!
author img

By

Published : Jul 16, 2022, 10:37 PM IST

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், இரண்டு நாள் அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஏற்பாடு செய்திருந்தார். இதில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், நாட்டின் தற்போதைய அதிகாரத்துவத்தின் நிலைமையை ‘இருண்ட படம்’ எனக் குறிப்பிட்டார்.

மேலும் ‘ஓய்வு பெற்ற பிறகு நிலைமை எப்படி இருக்கும் என்ற கேள்வி, நீதிபதிகள் மனதில் மேலோங்கக் கூடாது’ எனப் பேசினார்.

தொடர்ந்து "நம் வாழ்க்கையை எப்படி நடத்த விரும்புகிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நான் முதலமைச்சராகிவிட்டேன். சிலர் எம்.எல்.ஏக்களாகவும், சிலர் எம்.பி.க்களாகவும் மாறிவிட்டனர். நீங்கள் நீதிபதியாகும்போது, ​​நீங்கள் எவ்வளவு பெருமைப்படுவீர்கள்.

நாட்டிற்குச் சேவை செய்கிறோம். வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்பட வேண்டும், நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும். ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வோம் என்று தொடர்ந்து யோசித்தால், விஷயங்கள் எப்படி நடக்கும்?

‘ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது' என்று நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். நாங்கள் அதைப் பற்றி நிறைய யோசித்தோம். அவர்களில் ஒருவரான கோகோய், தலைமை நீதிபதியானார். ஆனால் அதற்குப் பிறகும், முன்பு இருந்த அதே அமைப்பு தொடர்ந்தது. கோகோய் அப்போதே சரியாக இருந்தார். பின்னர், கோகோய் நாடாளுமன்ற உறுப்பினரானார். இவை நாம் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்.

கடந்த ஜூலை 1 அன்று, முகமது நபி குறித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் கருத்துக்காக பார்திவாலா மற்றும் நீதிபதி சூர்ய காந்த் ஆகிய இருவரும் ஏதோ சொன்னார்கள். நீதித்துறையை மதிப்பது நமது கடமை. முன்னாள் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிகாரத்துவம் மற்றும் அலுவலர்கள் உட்பட 116 பேர் (நீதிபதிகளுக்கு எதிராக) நிற்க வைக்கப்பட்டனர். அவர்கள் யார் என்று தெரியுமா? அது எப்படி நிர்வகிக்கப்பட்டது? யார் நிர்வகித்தார்கள்?” என கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதையும் படிங்க: நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை கொலை செய்ய 40 பேர் குழு - தேடும் பணியில் என்ஐஏ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.