ETV Bharat / bharat

மத்தியப் பிரதேச வெள்ளம்: 12 பேர் உயிரிழப்பு - வெள்ளத்தால் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தில் ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால், இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rain fury in MP
Rain fury in MP
author img

By

Published : Aug 6, 2021, 8:19 AM IST

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு வாரமாக பெய்துவந்த கனமழையால் சிவ்புரி, சியோப்பூர், குவாலியர், தாடியா மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாடியா மாவட்டத்தில் சிந்து நதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால், இந்திய விமான படை உதவியுடன் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 1,171 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே மாநில அரசு, குவாலியர், தாடியா மாவட்டங்களில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துவருவதாகவும், அதன் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் மத்தியப் பிரதேசத்தின் 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: மேற்கு வங்க வெள்ளம்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.