டெல்லி: கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு ரயில் பயணங்களிலும், ரயில் நிலையங்களிலும் முகக் கவசம் அணியாதவர்கள் மற்றும் சுகதாரா சீர்கேடில் ஈடுபடுபவர்களிடம் அபராதம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் அனைத்து ரயில்வே கோட்டங்களையும் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே பயணிகள் சந்தைப்படுத்தும் பிரிவு நிர்வாக இயக்குநர் நீரஜ் ஷர்மா அனைத்து கோட்ட ரயில்வே பொது மேலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் இந்திய ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதில் மிக முக்கியமாக தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரயில் பயணத்தின்போது, ரயில் நிலையங்களிலும் பயணிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். இதைச் செய்ய தவறும் பட்சத்தில் அவர்களிடமிருந்து ரயில்வே விதி 2012இன் படி அபராதமாக ரூ. 500 வசூலிக்கப்படும்.
கரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு எச்சில் துப்புதல் போன்ற சுகதார சீர்கேடு ஏதும் நிகழாமல் பார்த்தக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும்.
இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதுடன், அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த மூன்று நாள்களில் தொடர்ந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது வரை 70 விழக்காடு பயணிகள் ரயில்கள் செயல்பாட்டில் உள்ளன.
இதையும் படிங்க: கோவிட் -19: உயிரிழப்பில் நீடிக்கும் குழப்பங்கள்... புள்ளிவிவரங்கள் ஒரு பார்வை!