நாட்டில் நிலவும் கோவிட்-19 பரவலைக் கருத்தில் கொண்டு, ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில் நிலையங்கள், ரயில்வே வளாகங்களில் முக கவசம் அணியத் தவறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது அடுத்தாண்டு ஏப்ரல் 16ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். ரயில் நிலையங்கள், ரயில்வே வளாகங்களில் எச்சில் துப்பும் வழக்கம் நாட்டில் அதிகம் காணப்படுவதால் இதுபோன்ற அபராதங்கள் விதிக்கும் முறையை ரயில்வே நடைமுறைப்படுத்தியுள்ளது.
கோவிட்-19 உள்ளதால், அசுத்தமான சூழல் ஆபத்தை ஏற்படுத்தும். இது பொது சுகாதாரத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் 22 ஆயிரத்து 431 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒரு நாளில் 318 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: பதுக்கம்மா பண்டிகையில் நடனமாடிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை