ETV Bharat / bharat

ரயில்வே அலுவலரின் அவசரத்தால் நேர்ந்த விபரீதம்! - Railway Station Master dead

ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி கீழே விழுந்த ரயில்நிலைய அலுவலர் ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் ரயில் விபத்து
பீகார் ரயில் விபத்து
author img

By

Published : Jan 8, 2022, 2:02 PM IST

பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள சல்மாரி ரயில் நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வந்தவர் அப்பாஸ் நாராயணன் கான். இவர் நேற்று வழக்கம்போல் அதிகாலையில் 5 மணி அளவில் தனது பணியைச் செய்ய கதிஹார் ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, அவர் போக வேண்டிய ரயில் பிளாட்ஃபார்மில் இருந்து நகர்ந்துள்ளது. இதைக்கணட அப்பாஸ் ரயிலை தவறவிட்டுவோம் என்ற அச்சத்தில் ரயிலை பிடிப்பதற்காக வேகமாக ஓடி வந்து ஏற முயன்றுள்ளார்.

அப்போது, ரயிலின் படியில் கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார். இதனால் அவர் ரயிலின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : ஆயுட்காலம் அதிகரிக்க இதை பின்பற்றுங்க!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.