ETV Bharat / bharat

Ashwini Vaishnaw: ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெறும் - ரயில்வே அமைச்சர் - ஹவுரா ரயில் விபத்து

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெறும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Ashwini Vaishnaw: ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெறும் - ரயில்வே அமைச்சர்

author img

By

Published : Jun 3, 2023, 11:03 AM IST

பாலசோர்: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதி நேற்று (ஜூன் 2) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது, மாநில மீட்புக் குழு, தேசிய பேரிடர் குழு மற்றும் உள்ளூர் மக்கள் பலரின் உதவியோடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், படுகாயம் அடைந்த 650க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள கோபால்பூர், காந்தபுரா, பாலசோர், பத்ராக் மற்றும் சோரோ போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று (ஜூன் 3) காலை விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “இந்த கோர ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதுதான் எங்களது முதன்மை இலக்காக உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த தரவுகளைக் கொண்ட உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த விசாரணையை எந்த வித இடையூறும் இன்றி சுதந்திரமாக மேற்கொள்வார். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்குப் பிறகு சீரமைப்புப் பணிகள் தொடங்கும். தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில அரசு ஆகியவை மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

முன்னதாக, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் நேற்று அறிவித்தார்.

அதேபோல், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Coromandel Express accident: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க அனுசரிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.