மகாராஷ்டிரா: நாக்பூர் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நிலக்கடலைக்கு ரசாயனம் தடவி பிஸ்தா என ஏமாற்றி விற்கும் தொழிற்சாலை இயங்கி வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் கஜானன் ராஜ்மானே தலைமையிலான தனிப்படையினர் அந்த தொழிற்சாலையில் சோதனை நடத்தியதில் நூற்றுக்கணக்கான கிலோவில் போலி பிஸ்தா பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த தொழிற்சாலையில் இருந்து 120 கிலோ கலப்பட பிஸ்தா மற்றும் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு பொருட்களும் கைப்பற்றப்பட்டன. சந்தையில் கிலோ ரூ.100 முதல் 140 வரை விற்கப்படும் நிலக்கடலையை பதப்படுத்தி, ரசாயனம் தடவி பிஸ்தாவாக மாற்றி கிலோ ரூ.1100க்கு விற்பனை செய்து வந்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொழிற்சாலையின் உரிமையாளர் திலீப் பவுனிகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:முன்கூட்டிய ரிடையர்மென்ட்; தீர்வுகள் என்ன? - வல்லுநர் ஆலோசனை