ETV Bharat / bharat

'விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நல்லெண்ணம் கிடையாது' - ராகுல்காந்தி

வேளாண் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், ஒவ்வொரு கட்டப் பேச்சுவார்த்தை தோல்விக்கு பிறகு, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான நாட்களை மட்டும் மத்திய பாஜக அரசு அளித்து வருவதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Former Congress President Rahul Gandhi
Former Congress PresidenFormer Congress President Rahul Gandhit Rahul Gandhi
author img

By

Published : Jan 9, 2021, 6:43 PM IST

டெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் விவசாயிகள் கடந்த 45 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு தீர்வு காண மத்திய அரசுடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இந்நிலையில், 9 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நல்ல எண்ணம் இல்லாத மத்திய பாஜக அரசு, தங்களது போர் தந்திரமாக, மென்மேலும் நாட்களை மட்டுமே வழங்கி வருகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்தியாவில் கரோனா தடுப்பூசி-மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.