திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார். அங்கிருந்து திருவனந்தபுரம் வந்த அவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்த தற்காலிக முடிவுகளை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து , கடந்த 1ஆம் தேதி கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தொடங்கிய ஐஸ்வர்ய கேரள யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொள்கிறார். காசர்கோடில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா முழுவதும் சுற்றி தற்போது திருவனந்தபுரத்தில் நிறைவடையவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி மதியம் 2 மணியளவில் கேரளா வந்தார்.பின்னர் அவர் சுமார் மூன்று மணியளவில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கேரள காங்கிரஸ் கமிட்டியில் புதிதாக மணி சி கப்பன் தொடங்கிய கட்சியை இணைக்கலாமா அல்லது அதற்கு ஏதேனும் எதிர்ப்பு உள்ளதா என்பது குறித்தும் அவர் ஆலோசிக்கவுள்ளார்.