ETV Bharat / bharat

ராகுல் காந்தி சுரந்த்பூர் பயணம்.. போலீசார் வழிமறித்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் பயணம்! - ராகுல் காந்தி மணிப்பூர் கலவரம்

வன்முறை பாதித்த சுரந்த்பூர் நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி சென்றார். பிஷன்பூர் அருகே காரில் சென்ற ராகுல் காந்தியை பாதுகாப்பு படையினர் வழிமறித்த நிலையில், அரசு தரப்பில் அவருக்கு ஹெலிகாப்டர் ஏற்படுத்திக் கொடுத்ததாக கூறப்பட்டு உள்ளது.

Rahul
Rahul
author img

By

Published : Jun 29, 2023, 4:18 PM IST

இம்பால் : கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள சுரந்த்பூர் நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி சென்றார். மணிப்பூர் மாநிலத்தை பார்வையிட சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பாதி வழியில் பாதுகாப்பு படையினர் வழிமறித்து தடுத்து நிறுத்திய நிலையில், ஹெலிகாப்டர் மூலம் சுரந்த்பூர் நகருக்கு சென்றார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த மே 3ஆம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மலைப் பிரதேச மாவட்டங்களில் வசிக்கும் குக்கி, நாகா பழங்குடியின மக்களுக்கும், தலைநகர் இம்பாலை சுற்றி உள்ள மைதேயி இன மக்களுக்கும் இடையே கடந்த மே 3ஆம் தேதி வன்முறை வெடித்தது.

பொருளாதாரத்தில் முன்னேறிய மைதேயி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கக் கூடாது என் நடத்தப்பட்ட பேரணியில் வன்முறை வெடித்தது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், அமைதியை நிலை நாட்ட முடியாமல் மாநில மற்றும் மத்திய அரசு திணறி வருகிறது.

இந்த கலவரத்தில் இதுவரை 120க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ராணுவத்தினர் இரவு பகலாக பாதுகாப்பு பணியிலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், வன்முறையால் பாதித்த மணிப்பூர் மாநிலத்தை ராகுல் காந்தி ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பார்வையிட உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்தது. இதையடுத்து இன்று (ஜூன். 29) தலைநகர் டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஷ்னுபூர் அருகே சென்ற ராகுல் காந்தியை பாதுகாப்பு படையினர் வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

தாக்குதல் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பை கருதி ராகுல் காந்தியின் வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மாநில அரசு ஏற்படுத்திக் கொடுத்த ஹெலிகாப்டர் மூலம் சுரந்த்பூருக்கு ராகுல் காந்தி அழைத்துச் செல்லப்பட்டார். ஹெலிகாப்டரில் ராகுல் காந்தியுடன் மாநிலத்தின் மூத்த போலீசார் அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் சென்றனர்.

சுரந்த்பூர் செல்லும் ராகுல் காந்தி அங்கு உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று பொது சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார் என்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் இடங்களை பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : பணியிடத்தில் ஜீன்ஸ், டீ-சர்ட் அணியத் தடை - யாருக்கு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.