தெலங்கானா: விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா மாநிலங்கள் வழியாக சென்று, கடந்த 23ஆம் தேதி தெலங்கானாவில் நுழைந்தது. பின்னர் தீபாவளிப் பண்டிகையையொட்டி மூன்று நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தெலங்கானாவில் ஐந்தாவது நாளாக இன்று(அக்.30) கொல்லப்பள்ளியில் ராகுல்காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை தொடங்கியது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யாத்திரையின்போது ராகுல்காந்தியுடன் சில பள்ளிக் குழந்தைகள் நடந்து சென்றனர். அவர்களுடன் பேசிக் கொண்டே நடந்து சென்ற ராகுல்காந்தி, திடீரென குழந்தைகளுடன் சேர்ந்து வேகமாக ஓடத் தொடங்கினார். உடனிருந்தவர்களையும் ஓட அறிவுறுத்தினார். அனைவரும் ஓடினர். ராகுல்காந்தி திடீரென ஓட சொன்னதால், யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் சற்று நேரம் திகைத்தனர்.
தொடர்ந்து யாத்திரை நடைபெற்று வருகிறது. இன்று மாலை ஷாட்நகரில் சோலிபூர் சந்திப்பில் ராகுல்காந்தி உரையாற்றவுள்ளார். யாத்திரை தெலங்கானாவில் சுமார் 375 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, நவம்பர் 4ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த பயணத்தின்போது ராகுல்காந்தி தெலங்கானாவில் மசூதிகள், கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லவிருப்பதாக தெரிகிறது. பிறகு யாத்திரை நவம்பர் 7ஆம் தேதி மகாராஷ்ட்ராவில் நுழைய உள்ளது.
இதையும் படிங்க: ’மனிதத்தின் மாபெரும் அச்சுறுத்தல் தான் பயங்கரவாதம்...!’ - ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்