டெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசை விமர்சனம் செய்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கோடைகாலத்தில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிலக்கரி பற்றாக்குறைக் காரணம் என்றும்; மத்திய அரசு மாநிலங்களுக்குத் தேவையான நிலக்கரியினை வழங்கவில்லை என்றும்; பல மாநிலங்கள் அரசுகளை குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், ராகுல் காந்தி இன்று (மே 2) தனது ட்விட்டர் பக்கத்தில், "கோடை காலத்தில் வெயில் கடுமையாக இருக்கிறது. அதனால் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுகிறது. மின்வெட்டு பிரச்னை, வேலையிழப்பு, விவசாயிகள் பிரச்னை, பணவீக்க பிரச்னை எனப் பல்வேறு நெருக்கடிகள் நாட்டில் நிலவுகின்றன.
பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால மோசமான நிர்வாகம், ஒரு காலத்தில் உலகின் மிக வேமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டிருந்த நாட்டை எவ்வாறு சீரழிக்கலாம் என்பதையே பாடமாக்கியுள்ளது" என்று விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'காரணம் கூறாமல் தீர்வு காணுங்கள்' - உபி அரசை சாடிய அகிலேஷ்!