உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. முதலில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில், ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பாஜக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாஸ்டர் ஸ்ட்ரோக்
பாஜக தனது வரம்புகளை மீறி தேர்தலில் வன்முறையை ஏவிவிட்டுள்ளதாகவும், இந்த அரசு தனது மோசமான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது என பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச பாஜக அரசு வன்முறைக்கு மாஸ்டர் ஸ்ட்ரோக் எனப் புதுப் பெயரை வைத்துள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிரியங்கா காந்தியை முகமாக நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, பிரியங்கா காந்தி அங்கேயே முகாமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 2024க்குள் 60,000 கிமீ நெடுஞ்சாலை: அமைச்சர் நிதின் கட்கரி இலக்கு!